தேசிய மக்கள் சக்தியின் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட 3 மில்லியன்(முப்பது இலட்சம் ரூபா) ரூபா செலவில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் பிரமந்தனாறு குளத்தின் கீழான வாய்க்கால் புனரமைப்பு பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.
குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ். முரளிதரன், அரச உத்தியோகத்தர்கள், பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
