“யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆட்சியை இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்ற ஒத்துழைத்த எமது கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இன்று தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் தெரிவின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, “யாழ்ப்பாணம் மாநகர சபையில் அதிக ஆசனங்களைத் தமிழரசுக் கட்சியே பெற்றுக்கொண்டது. இதனடிப்படையில் மேயர் மற்றும் துணை மேயரை நிறுத்தி வெற்றியையும் பெற்றுள்ளோம்.
இதற்கு ஒத்துழைத்த எமது கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் நாம் இந்த நேரத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம…
[8:49 pm, 13/06/2025] Lazy😫: தமிழீழம் கேட்ட வட்டுக்கோட்டையை திட்டமிட்டு அழிக்கின்றீர்களா – கலாநிதி சிதம்பரமோகன் ஆதங்கம்.!
வட்டுக்கோட்டை என்பது தொகுதியா? அல்லது பிரதேசமா? வட்டுக்கோட்டையை திட்டமிட்டு நீங்கள் அழிக்கின்றீர்களோ தெரியவில்லை என கலாநிதி சிதம்பரமோகன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது நேற்றையதினம் நடைபெற்றது. அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த சங்கானையை நகரசபையாக தரம் உயர்த்துங்கள், வட்டுக்கோட்டையை பிரதேச சபையாக மாற்றுங்கள்.
தமிழீழம் கேட்ட வட்டுக்கோட்டையில், தந்தை செல்வா காலம் தொடக்கம் இன்றுவரை பொது மலசலகூடம் இல்லை. ஒரு பொலிஸ் நிலையம் மட்டும் உள்ளது. நீங்கள் திட்டமிட்டு வட்டுக்கோட்டையை அழிக்கின்றீர்களோ தெரியவில்லை” என ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.