முல்லைத்தீவு மாவட்ட செயலக மத்தியஸ்த அலகின் ஏற்பாட்டில் நடைபெற்ற பாடசாலை மத்தியஸ்த சபை பயிற்சி நிகழ்ச்சியில் பங்கு பற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (12) முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வித்தியானந்த கல்லூரியின் பதில் அதிபர் திரு. க.சுதாகரன் மற்றும் மத்தியஸ்த சபையின் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் திரு.ச.லக்ஸ்மன் அவர்களும் அதிதிகளாக கலந்து சிறப்பித்திருந்தனர்.
மேலும் இந்த நிகழ்வில் பாடசாலை மத்தியஸ்த சபைக்கான பயிற்சியில் பங்கு பற்றிய 30 மாணவர்களுடன் பெருமளவிலான மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தப் பயிற்சியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த இம் மாணவர்கள், பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகளினை சுமூகமாக தீர்த்து வைக்கும் மத்தியஸ்தர்களாக தொழிற்படுவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


