முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வீர வீராங்கனைகள் 40 பேருக்கு இரண்டு நாள் குத்துச்சண்டை பயிற்சி நேற்றைய தினம் (12) முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களால் காலை 9.00 மணிக்கு மாவட்ட உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாகாண மற்றும் தேசிய போட்டிகளில் வெற்றி பெறும் நோக்குடன் இந்த பயிற்சியானது முன்னாயத்தமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு.முகுந்தன், மாவட்ட பயிற்றுவிப்பாளர் திரு.சகிதரசீலன், குத்துச்சண்டை பயிற்சி ஆசிரியர்கள் முதலானோர் கலந்து கொண்டனர்.


