முல்லைத்தீவு மாவட்ட சுற்றுச்சூழல் குழுக் கூட்டம் இன்றைய தினம்(12) பி.ப 2.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சுற்றுச்சூழலை சிறந்த முறையில் பேணும் நோக்கில் மாவட்டத்தில் இயங்கும் பல்வேறு திணைக்களங்களை ஒருங்கிணைத்து சுற்றுப்புறச்சூழலை சிறப்பான முறையில் அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
அதில் குறிப்பாக வீதிகளில் காணப்படும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தல், நகர்ப்புறச் சூழலை சுத்தாமாக வைத்திருத்தல் முதலான முக்கிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
சட்டவிரோத மண் அகழ்வு, அனுமதிக்கப்பட்ட மண் அகழ்வு, அனுமதிக்கப்பட்ட கிரவல் அகழ்தல் முதலான விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
மிக முக்கியமாக மாவட்ட சுற்றுலாத்துறையினை மேம்படுத்திடும் நோக்கில் அதிமுக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சி.ஜெயக்காந், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர், மாவட்ட , கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் அதிகாரி, மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர், மாவட்ட வனவள அதிகாரி, மாவட்ட சுற்றுச் சூழல் அதிகார சபையின் அதிகாரிகள், முல்லை வலயக் கல்விப் பணிமனையின் அதிகாரி, கரைதுறைப்பற்று பிதேச சபை செயலாளர், பொலிஸார், கடற்படை அதிகாரி, காணி பயன்பாட்டுத் திட்டமிடல் கிளையின் உத்தியோகத்தர், ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


