கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் செயலக சேவை நடைமுறை தொடர்பான செயலியை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்று(13) நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தின் மக்களுக்கான சேவை இலகுவாக வழங்கும் வகையில் நடைமுறைப் படுத்தும் செயலியை அங்குராப்பணம் செய்யும் நிகழ்வு இன்று பகல் 10 மணிக்கு கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெ. ரஜீவன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளீதரன் மற்றும் துறைசார்ந்த திணைக்களத்தின் தலைவர்கள், பிரதேச மட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கையின் முதலாவது பொதுமக்கள் சேவையை வழங்கும் இந்த செயலி கண்டாவளை பிரதேச செயலகத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டாவளை பிரதேச செயலகத்தினால் இணையவழி பங்கீட்டு அட்டையும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
