ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஸ் குமார் ” எல்லாம் என் கண் முன்னே நடந்தது; நான் உயிருடன் தப்பித்ததை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை” என தெரிவித்தார்.
ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஸ் குமார் தனது திகில் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது: உயிர் பிழைத்ததை என்னால் நம்ப முடியவில்லை. நான் விழுந்த இடம் விடுதியின் தரைப்பகுதி. என் கண்முன்னே விமான பணி பெண்கள் மற்றும் பயணிகள் உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்தது.
விமானம் வெடித்த போது எனது இருக்கை அருகே விரிசல் விழுந்தது. அதை பயன்படுத்தி வெளியே குதித்தேன். எனது இடது கையில் தீப்பிடித்தது. உரிய நேரத்தில் மீட்பு படையினர் என்னை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றினர். விமானம் விழுந்த பகுதியின் எதிர் பக்கத்தில் சுவர் இருந்ததால் யாரும் தப்பிக்க முடியவில்லை.
நான் அமர்ந்திருந்த பகுதியில் மட்டுமே தப்பிக்க இடம் இருந்தது. விபத்து குறித்து பிரதமர் மோடி என்னிடம் கேட்டறிந்தார். நானும் இறந்திருப்பேன் என்றே நினைத்தேன். என் கண் முன்னே அனைத்து துயர சம்பவங்களும் நிகழ்ந்தது. விடுதியில் விமானம் மோதிய பக்கம் நான் அமரவில்லை. இது தான் நான் தப்பிக்க உதவியது.