பதுளை, ஹல்துமுல்ல பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது. தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் தெரிவான இரண்டு உறுப்பினர்கள் என்.பி.பிக்கு ஆதரவளித்தனர்.
ஹல்துமுல்ல பிரதேச சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 9 இடங்களைப் பெற்றிருந்தது.
ஐக்கிய மக்கள் சக்திக்கு 6 இடங்களும், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு இரண்டு இடங்களும், ஸ்ரீலங்கா பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு இரண்டு இடங்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஒரு இடமும், ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஒரு இடமும் கிடைக்கப் பெற்றன.
இந்நிலையிலேயே வாக்கெடுப்பின்போது தமிழ் முற்போக்குக் கூட்டணியின்` உறுப்பினர்கள் இருவரும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்துள்ளனர்.
இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.