• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 9, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தமிழரசிடம் இருந்து விக்கியை பாதுகாக்க இனி யாரும் இல்லை.!

Mathavi by Mathavi
June 13, 2025
in இலங்கை செய்திகள்.
0
தமிழரசிடம் இருந்து விக்கியை பாதுகாக்க இனி யாரும் இல்லை.!
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி தாமே அவரைப் பாதுகாத்ததாகச் சுட்டிக்காட்டியுள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், எதிர்வரும் காலத்தில் விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சி முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகளிலிருந்து அவரைப் பாதுகாப்பதற்கு யாரும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நல்லூர் பிரதேச சபையில் இணைந்து ஆட்சியமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை கைச்சாத்திட்டனர்.

இது பற்றி அன்றைய தினம் கருத்து வெளியிட்ட சி.வி.விக்னேஸ்வரன், “கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது நாம் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். இருப்பினும் தமது சங்கு சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என அவர்கள் நிபந்தனைகளை விதித்திருந்தனர். அந்த நிபந்தனைகளுக்கு உடன்பட முடியாது என்பதால் நாம் தனித்துச் செயற்பட்டோம். இந்நிலையில், உள்ளூராட்சி சபைகளில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் இணைந்து பயணிப்பதை விடவும், தமிழரசுக் கட்சியுடன் இணைவது எமக்கு அதிக சந்தோஷத்தை அளிக்கின்றது.” – என்று தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றிக் கருத்துரைத்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான புளொட்டின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த காலப் பகுதியில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

இது தொடர்பில் சித்தார்த்தன் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு மாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராகக் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை ஜூன் 14 ஆம் திகதி அப்போதைய வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவிடம் கையளிக்கப்பட்டது.

அவ்வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த தமிழரசுக் கட்சியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கூட்டமைப்பில் அங்கம் வகித்த ஏனைய கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி, அந்த நெருக்கடியிலிருந்து சி.வி.விக்னேஸ்வரனைப் பாதுகாத்தன.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது அந்த வரலாறை விக்னேஸ்வரன் மறந்துவிட்டார்.

எதிர்வரும் காலத்தில் தமிழரசுக் கட்சியால் விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்னெடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகளில் இருந்து அவரைப் பாதுகாப்பதற்கு யாரும் இல்லை.” – என்றார்.

Related Posts

போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் இருவர் கைது.!

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது.!

by Mathavi
May 9, 2026
0

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு...

யாழ். போதனா வைத்தியசாலையின் எரிந்த பகுதி பொலிஸாரின் கட்டுப்பாட்டில்.!

யாழ். போதனா வைத்தியசாலையின் எரிந்த பகுதி பொலிஸாரின் கட்டுப்பாட்டில்.!

by Mathavi
May 9, 2026
0

யாழ். போதனா வைத்தியசாலையின் தீக்கிரையான மருந்துக் களஞ்சியப் பகுதி, அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் ஆய்வுகள் நிறைவடையும் வரை பொலிஸாரின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்...

உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு யாழில் மரநடுகை நிகழ்வு.!

உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு யாழில் மரநடுகை நிகழ்வு.!

by Mathavi
May 9, 2026
0

உலக செஞ்சிலுவை தினத்தை சிறப்பிக்கும் முகமாக, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் கிளையினரால் இன்றைய தினம் விசேட மரநடுகை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம்...

இது சதியா? தற்செயலா? – யாழ். வைத்தியசாலை தீ விபத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு.!

இது சதியா? தற்செயலா? – யாழ். வைத்தியசாலை தீ விபத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு.!

by Mathavi
May 9, 2026
0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகள் பல ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமாக இருக்கலாம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும்...

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் கிளை இளைஞர் அணி தலைவராக ஊடகவியலாளர் லின்ரன் தெரிவு.!

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் கிளை இளைஞர் அணி தலைவராக ஊடகவியலாளர் லின்ரன் தெரிவு.!

by Mathavi
May 9, 2026
0

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் கிளை இளைஞர் அணியின் புதிய நிர்வாகத் தெரிவு இன்று சனிக்கிழமை (09) காலை 10:30 மணியளவில் யாழ் கிளைத் தலைமைச் செயலகத்தில்...

வாக்குமூலம் கேட்டு கபில மீது சித்திரவதை.!

வாக்குமூலம் கேட்டு கபில மீது சித்திரவதை.!

by Mathavi
May 9, 2026
0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு வாக்குமூலம் அளிக்குமாறு கபில சந்திரசேனவுக்குப் பாரிய அழுத்தம் கொடுக்கப்பட்டது என்று முன்னாள் அமைச்சர்...

முக்கிய சாட்சியாளர்களின் மர்ம மரணங்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. கடும் சந்தேகம்.!

முக்கிய சாட்சியாளர்களின் மர்ம மரணங்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. கடும் சந்தேகம்.!

by Mathavi
May 9, 2026
0

அரச திறைசேரி நிதி மோசடி மற்றும் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய சாட்சியாளர்களின் மர்ம மரணங்கள் குறித்து அரசு உடனடி மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை...

இந்திர விழாவில் சுகாதார சீர்கேடு; 6 வியாபாரிகளுக்கு பிடியாணை.!

இந்திர விழாவில் சுகாதார சீர்கேடு; 6 வியாபாரிகளுக்கு பிடியாணை.!

by Mathavi
May 9, 2026
0

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை இந்திர விழாவின் போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது செயற்பட்ட 6 உணவு நிலைய உரிமையாளர்களுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் அறுவருக்கு ஒரு இலட்சத்து...

முல்லைத்தீவில் அமைதிக்கான சர்வமத ஒருங்கிணைந்த பிரார்த்தனைகள்.!

முல்லைத்தீவில் அமைதிக்கான சர்வமத ஒருங்கிணைந்த பிரார்த்தனைகள்.!

by Mathavi
May 9, 2026
0

சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் ஏற்பாட்டில் அமைதிக்கான சர்வமத ஒருங்கிணைந்த பிரார்த்தனைகள் முல்லைத்தீவில் இடம்பெற்றது. முல்லை மாவட்டத்தின் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஈரான், ரஷ்யா, அமெரிக்கா...

மகளையும், பேரப்பிள்ளையையும் காணவில்லை என தாய் பொலிஸில் முறைப்பாடு.!

மகளையும், பேரப்பிள்ளையையும் காணவில்லை என தாய் பொலிஸில் முறைப்பாடு.!

by Mathavi
May 9, 2026
0

கணவருடன் சென்ற மகள் மற்றும் 10 மாதம் நிரம்பிய பேரப்பிள்ளை ஆகிய இருவரும் காணாமல் போயுள்ளதாக குறித்த பெண்ணின் தாய் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி