“அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக மிகுந்த கவலையடைவதாக” ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, விமானத்தில் பயணித்த அனைவரின் குடும்பத்தினருக்கும் தமது இரங்கலை தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த சோகமான தருணத்தில் இலங்கை மக்கள் இந்தியாவுடன் இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
