பானந்துரை பிரதேசத்திலிருந்து இன்று காலை நுவரெலியா நோக்கி சென்ற முச்சக்கர வண்டி லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுகலை பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி 60 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததால் முச்சக்கர வண்டி பாரிய சேதமானது. முச்சக்கர வண்டியில் சென்ற இருவரில் சாரதிக்கு மாத்திரம் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியினை பள்ளத்தாக்கில் இருந்து எடுக்கும் போது.நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிக மழை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.