வீதி விபத்து மற்றும் மாணவர்களின் கொண்ணிலை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (12) மதியம் 12 மணியளவில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் இடம் பெற்றது.
பாடசாலை அதிபர் செல்வி இராச்சியலச்சுமி சுப்பிரமணிய குருக்கள் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியக் கலாநிதி ஆதித்தன் கலந்துகொண்டு வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பாகவும், வீதியில் பூமிக்கும் போது அவதானமாக பயணித்தல், வீதி விபத்து ஏற்பட்டால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குரிய வழிமுறைகள் உட்பட பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், அதிபர் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
