திருகோணமலை மாவட்ட சமாதான நீதவானாக 02/06/2025 அன்று திருகோணமலை மாவட்ட நீதிபதியாகிய இஷ்மைல் பவுஷ் ரஷாக் அவர்கள் முன்னிலையில் சமாதான நீதவானாக தம்பிராசா ராஜ்குமார் பதவியேற்றர்.
தம்பிராசா ராஜ்குமார் அவர்கள் 25 வருடகாலமாக ஆசிரியர் தொழில் செய்து வருவதுடன் ஒக்ஸ்போட் கல்வி நிறுவனத்தின் இயக்குனராகவும் இருப்பதோடு திருகோணமலை மாவட்ட சமூகசேவை அமைப்புகளான தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் தலைவராகவும் இலிங்கநகர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கிளைக்குழு தலைவராகவும், இலிங்கநகர் பாலமுருகன் ஆலயத்தின் கணக்காளராகவும் கோணலிங்க சனசமூக நிலையத்தின் பொருளாளராகவும் சமூக சேவை செய்துவருகிறார்.
இவர் கிராமிய பொலிஸ் பாதுகாப்பு குழுவின் உறுப்பினராவும் பல சமூக பணிகளை செய்து வருவதோடு கிழக்கு மாகாண கனடா உறவுகரங்கள் அமைப்பின் இயக்குனராக பல சமூக பணிகளை திறன்பட செய்து வரும் இவர் ஒரு கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா பட்டதாரியாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.