எலிக்காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விசேட வைத்தியர் துஷானி தபரேரா இதனைக் குறிப்பிட்டார்.
இந்த நோய் ஒரு பக்றீரியாவால், குறிப்பாக பாலூட்டிகளின் சிறுநீர் வழியாகப் பரவுகிறது. உண்மையில், இந்த பாக்டீரியா எலிகளின் சிறுநீர் அமைப்பில் வாழ்கிறது. எலிகள் தண்ணீர் குடிக்கும்போது, அவற்றின் சிறுநீர் தண்ணீரிலோ அல்லது மண்ணிலோ கலக்கிறது. நாம் அந்த மண் அல்லது தண்ணீரை பயன்படுத்தும் போது, மக்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலிருந்தே அதிக எலிக்காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் துஷானி தபரேரா குறிப்பிட்டார்.
இதற்கிடையில், கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் சிறுவர்களுக்கான வைத்தியர் கோசல கருணாரத்ன இந்த நாட்களில் சிறுவர்கள் மத்தியில் பரவி வரும் காய்ச்சல் தொடர்பான நோய்கள் குறித்து ஊடக சந்திப்பின் போது பின்வருமாறு விளக்கினார்.
இந்த நாட்களில் சிறுவர்களிடேயே கடுமையான காய்ச்சல் பரவி வருகிறது. அண்மைய நாட்களில் டெங்கு, எலிக்காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் போன்றன அதிகம் பரவி வருகின்றது.
எனவே, ஒரு குழந்தைக்கு அதிக காய்ச்சல் மற்றும் வாந்தி இருந்தால், வயிற்று வலி இருந்தால், சிறுநீர் கழிக்க முடியாமல் இருந்தால் உடினயாக வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.