மத்துகமை, அம்பருல்லகஹவத்த பகுதியில் தந்தை மற்றும் மகன் மீது மற்றொரு குழுவினர் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது.
குறித்த தாக்குதலில் மகன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் நாவுத்துடுவ, யடிதொல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என்றும், காயமடைந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று (11) இரவு இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு அதிகரித்ததை அடுத்து ஏற்பட்ட மோதலின் போது இந்த தாக்குதல் நடந்துள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த தந்தையும் மகனும் களுத்துறையில் உள்ள நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது, மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தாக்குதலை நடத்திய நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். அதேநேரம், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மத்துகமை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.