“கொழும்பு மாநகர சபைக்கான மேயர் பதவிக்கு ஒருவரை நியமிப்பதற்கு எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியே அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
எனவே, மேயர் பதவிக்கு ஒரு பெயரை பரிந்துரைக்கும் உரிமை ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ளது.
இருப்பினும், இந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்படும் நபர் மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படாதவராகவும் எவ்வித சர்ச்சைகளிலும் சிக்காதவராகவும் இருக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.