• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 12, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும்..!

Thamil by Thamil
June 11, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும்..!
Share on FacebookShare on Twitter

பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையை ஓரிருநாட்கள் மாத்திரம் முன்னெடுக்க முடியாது. தொடர்ச்சியாக சகல திணைக்களங்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். மக்களுக்கு போதியளவு விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர் சட்டநடவடிக்கையை தீவிரமாக முன்னெடுக்குமாறு பணித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இதனை நாளையிலிருந்தே ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தினார்.

பார்த்தீனியத்தை முற்றாக ஒழிக்கும் செயற்றிட்டம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (11.06.2025) நடைபெற்றது.

ஆளுநர் தனது ஆரம்ப உரையில், “அலுவலர்களை களத்துக்குச் சென்று பணியாற்றுமாறு திரும்பத் திரும்பக் கூறிவருகின்ற போதும் அலுவலகத்திலிருந்தே திட்டங்களை தயாரிக்கின்றனர். அதேபோல ஒரு விடயத்தைக் குறிப்பிட்டால் அதன் முன்னேற்றத்தை தொடர்ந்து கவனிக்கின்றதன்மையும் இல்லை. அரசாங்கத்தின் ஊடாக எமது மக்களுக்கான அபிவிருத்திகளைச் செய்வதற்கு சாதகமான சூழல் இருக்கின்றது. அதைப் பயன்படுத்தி மக்களுக்கு எதையாவது பெற்றுக்கொடுக்க முயற்சிக்க வேண்டும்.

ADVERTISEMENT

பெரும்பாலான வீதிகளின் ஓரங்களில் பார்த்தீனியம் செடி காணப்படுகின்றது. பார்த்தீனியத்தை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கை உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும் என்பதுடன் விரைவாக அதைச் செயற்படுத்த வேண்டும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

பிரதம செயலாளர், இது தொடர்பான சட்ட ஏற்பாடுகளைக் குறிப்பிட்டதுடன் அதற்கு அமைவாக வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும், அதனுடன் தொடர்புடைய 12 திணைக்களங்களையும் இதில் இணைத்துக் கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் சட்டநடவடிக்கை எடுப்பதற்குரிய அலுவலர்களுக்கான அடையாள அட்டையையும் விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், வடக்கு மாகாண விவசாயத் திணைக்களப் பணிப்பாளரால் பார்த்தீனியம் ஒழிப்புக்குரிய நடவடிக்கை திட்டம் தயாரிக்கப்பட்டு சகல திணைக்களங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றும் அதை துரிதமாக நடைமுறைப்படுத்த சகலரும் ஒத்துழைக்கவேண்டும் எனவும் கோரினார்.

வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், ஒவ்வொரு அரச திணைக்களங்களும் தமக்குரிய இடங்களில் பார்த்தீனிய ஒழிப்பை முதலில் முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இதன் பின்னர் சூம் ஊடாக இணைந்து கொண்ட மாவட்டச் செயலர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.மன்னார் மாவட்டச் செயலர், மன்னார் மாவட்டத்தில் 4 இடங்கள் பார்த்தீனியம் அதிகமாக உள்ள இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவற்றில் ஒழிப்பு நடவடிக்கையை துரிதமாக ஆரம்பிப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல கிளிநொச்சி மாவட்டச் செயலர், கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவில் வீதியோரங்களிலேயே அதிகளவு காணப்படுகின்றன என்றும் சம்பந்தப்பட்ட வீதிக்குரிய திணைக்களம் ஊடாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். அதேபோல பொதுமக்களுக்குரிய தனியார் காணிகளில் கிராம அலுவலர்கள் ஊடாக அறிவுறுத்தல் வழங்கி நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலர்களும் தமது பிரதேசங்களில் பார்த்தீனியம் அதிகமாக உள்ள இடங்கள் அடையாளப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் அனைத்து மாவட்டச் செயலர்களும் சட்டநடவடிக்கை எடுப்பதன் ஊடாகவே இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் எனக் குறிப்பிட்டனர். இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், சட்டநடவடிக்கைக்கு முன்னர் மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கி அதன் பின்னர் சட்டநடவடிக்கையை ஆரம்பிப்போம் என்று குறிப்பிட்டார்.

இதன்போது விவசாயத் திணைக்களத்தால் கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விவரிக்கப்பட்டது. மேலும், மக்களின் காணிகளில் பார்த்தீனியம் காணப்படுமாக இருந்தால் வெள்ளை அறிவித்தல் தொடர்ந்து மஞ்சள் அறிவித்தல் இறுதியாக சிவப்பு அறிவித்தல் காட்சிப்படுத்தியே சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டனர். மேலும் களைநாசினிகள் ஊடாக பார்த்தீனியத்தை கட்டுப்படுத்த முடியும் என்றும் அதனைப் பயன்படுத்துவதால் மண் வளம், நிலத்தடி நீர்ப்பாதிப்பு உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

கைவிடப்பட்ட தனியார் காணிகளில் பிரதேச சபையின் ஊடாக பார்த்தீனியத்தை அகற்றுவது என்றும் அதற்குரிய கட்டணத்தை சோலைவரியுடன் இணைந்து அறவிடமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையை கடந்த காலங்களைப்போன்று குறிப்பிட்ட காலப்பகுதிக்கு மாத்திரம் முன்னெடுக்காமல் தொடர்ந்து 4 – 5 வருடங்களுக்கு முன்னெடுக்க வேண்டும் என அறிவுறுத்திய ஆளுநர், பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி அவர்களின் காணிகளில் உள்ள பார்த்தீனியத்தை ஒழிப்பது, அரச திணைக்களங்கள் தமக்குரிய ஆதனங்களில் பார்த்தீனியத்தை ஒழிப்பது என அனைத்தும் சமநேரத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

மேலும், மாவட்டச் செயலர்கள் மற்றும் பிரதேச செயலர்கள் தமது பிரதேச மற்றும் மாவட்ட மட்டக் கூட்டங்களில் கலந்துரையாடி தொடர் நடவடிக்கை முன்னெடுக்கவேண்டும் எனவும், பிரதம செயலாளர் மாதாந்தம் முன்னேற்றத்தை ஆராயவேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.

இந்தக் கலந்துரையாடல், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வடக்கு மாகாண விவசாயத் திணைக்களப் பணிப்பாளர், யாழ்ப்பாணத்தின் அனைத்துப் பிரதேச செயலாளர்களும் பிரதேச சபைச் செயலாளர்களும், யாழ். மாநகர சபை ஆணையாளர், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கமநலசேவைகள் திணைக்களத்தினர் ஆகியோர் நேரிலும், மாவட்டச் செயலாளர்கள் சூம் ஊடாகவும் இணைந்து கொண்டனர்.

Related Posts

சாவகச்சேரியில் சைக்கிளில் தெரிவான இருவருக்கு எதிரான வழக்கு நாளை..!

சாவகச்சேரியில் சைக்கிளில் தெரிவான இருவருக்கு எதிரான வழக்கு நாளை..!

by Thamil
June 12, 2025
0

சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவர் அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகப்...

வெருகல் படு கொ*லையின் 39 ஆவது நினைவேந்தல்..!

வெருகல் படு கொ*லையின் 39 ஆவது நினைவேந்தல்..!

by Thamil
June 12, 2025
0

திருகோணமலை, வெருகல் படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு வெருகல் – பூநகர் பகுதியில் இன்று (12) வியாழக்கிழமை மிகவும் உணர்வுபூர்வமான முறையில் நினைவுகூரப்பட்டது. வெருகல் - ஈச்சிலம்பற்று...

கனடாவின் என் கடமை நிறுவனத்தினருக்கும் திருகோணமலை மீடியா போரத்தின் தலைவருக்குமிடையிலான சந்திப்பு.!

கனடாவின் என் கடமை நிறுவனத்தினருக்கும் திருகோணமலை மீடியா போரத்தின் தலைவருக்குமிடையிலான சந்திப்பு.!

by Mathavi
June 12, 2025
0

கனடாவின் என் கடமை நிறுவனத்தின் பணிப்பாளருக்கும், திருகோணமலை மீடியா போரத்தின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு கிண்ணியா மீடியா போரத்தின் இல்லத்தில் இன்று(12) காலை நடைபெற்றது. கனடாவின் என்...

திருகோணமலையில் காணிப் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்..!

திருகோணமலையில் காணிப் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்..!

by Thamil
June 12, 2025
0

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பான சிறப்புக் கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள காணிப்...

கற்கோவளம் இராணுவ முகாம் அருகில் மனித எலும்பு எச்சங்கள் அடையாளம்..!

கற்கோவளம் இராணுவ முகாம் அருகில் மனித எலும்பு எச்சங்கள் அடையாளம்..!

by Thamil
June 12, 2025
0

யாழ். பருத்தித்துறையில் மனித மண்டையோட்டுடன் கூடிய மனித எலும்பு எச்சங்கள் இன்று (12) அடையாளம் காணப்பட்டுள்ளன. பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் அண்மையில் விடுவிக்கப்பட்ட இராணுவ முகாம் அருகில்...

மாற்றுத்திறனாளிகளுக்கான சிஹின ஸ்ரீலங்கா நிகழ்வு..!

மாற்றுத்திறனாளிகளுக்கான சிஹின ஸ்ரீலங்கா நிகழ்வு..!

by Thamil
June 12, 2025
0

சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் மனிதவளம் மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் இணைந்து திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் புதுக்...

அத்துமீறி வருகின்ற இந்திய மீனவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்..!

அத்துமீறி வருகின்ற இந்திய மீனவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்..!

by Thamil
June 12, 2025
0

"இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையை தடுக்க இலங்கை அரசும், மீனவ அமைச்சும் தீவிரமாக இருக்கிறது. கடற்படையும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்கள். எதிர்வரும் 15 ஆம்...

கிழக்கின் 100 சிறுகதைகள், கிழக்கின் கவிக்கோர்வை எனும் இரு நூல்களின் அறிமுக விழா.!

கிழக்கின் 100 சிறுகதைகள், கிழக்கின் கவிக்கோர்வை எனும் இரு நூல்களின் அறிமுக விழா.!

by Mathavi
June 12, 2025
0

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கின் 100 சிறுகதைகள் தொகுப்பு - 2 மற்றும் கிழக்கின் கவிக்கோர்வை தொகுப்பு ஆகிய இரு பாரிய நூல்களின் அறிமுக விழா...

வட மாகாணத்தின் கூட்டுறவுத்துறையை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்.!

வட மாகாணத்தின் கூட்டுறவுத்துறையை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்.!

by Mathavi
June 12, 2025
0

நிலைபேறான கூட்டுறவு மேம்பாடிற்கான புதிய வழியைத் தொடங்குதல் என்ற தொனிப்பொருளில் வடமாகாணத்தின் கூட்டுறவுத்துறையை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் கிளிநொச்சி...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி