கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் வீட்டில் வளர்க்கப்பட்ட சுமார் 3.6 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா கலப்பின குஷ் செடிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட 33 வயதான நபர் தெஹிவளை – கல்கிஸ்ஸ நகராட்சி மன்ற தீயணைப்பு பிரிவில் பணியாற்றுபவர் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.
2 – 3 அடி போன்ற பல்வேறு அளவுகளில் 36 கஞ்சா கலப்பின குஷ் செடிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விசாரித்தபோது, இந்த செடிகள் இணையம் வழியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கஞ்சா கலப்பின குஷ் விதைகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் தயாரித்த போதைப்பொருட்களை நண்பர்கள் மத்தியில் விற்பனை செய்து வந்துள்ளார். அத்துடன் இரவு விடுதி வாடிக்கையாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் தாவரங்களை உலர்த்திய பிறகு, ஒரு கிராம் 8,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.