இலங்கையில் ஏற்படவிருந்த ஒரு பெரும் ரயில் விபத்தை ஒரு பெண் தனது துரித செயலால் தடுத்துள்ளார்.
இன்று காலை, கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான ரயில் பாதையில் ஒரு பெரிய தாழ்வுப் பகுதி]ஏற்பட்டிருந்தது. காலை வேலைக்குச் சென்று கொண்டிருந்த ஒரு பெண், இதனைக் கவனித்து உடனடியாக ரயில் நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் சற்றும் தாமதிக்காமல் செயற்பட்டு, அதே நேரத்தில் அந்தப் பாதையில் வந்து கொண்டிருந்த ரயிலை நிறுத்தி, நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர். இந்தப் பாராட்டத்தக்க நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் காரணமாக, கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பாணந்துறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலின் தண்டவாள பாதிப்பை ஒரு இளைஞர் தனது சிவப்புச் சட்டையுடன் ஓடிச் சென்று ரயிலை நிறுத்திய சம்பவம் பெரும் பாராட்டைப் பெற்றிருந்தது. அதுபோலவே, இன்று உயிர் காத்த இந்த பெண்ணுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.