முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் ஒருவர் இன்று (11) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
தனது அமைச்சுப் பதவியை முறைக்கேடாக பயன்படுத்தி நியமனங்களை வழங்கியமை, அரசாங்க சம்பளம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகளை முறைகேடாகப் பயன்படுத்தி மோசடி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது ஆணைக்குழுவால் தற்போது நடத்தப்பட்டு வரும் விசாரணைக்கு அமையவே இந்தப் பெண் கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் ஊழல் விசாரணைக் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.