முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (11) புதன்கிழமை முன்னிலையாகி ஒரு மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கினார்.
இலங்கையில் மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார். அதற்கமைய அங்கு இன்று முன்னிலையாகிய ரணில், ஒரு மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.
இலங்கையில் மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு அளித்திருந்தார். இந்த முறைப்பாடு தொடர்பாக, அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களிடம் இருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.