முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல்தெனியவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துஷார உபுல்தெனிய இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
துஷார உபுல்தெனிய, நிதி மோசடிக் குற்றச்சாட்டின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அத்துல திலகரத்ன என்பவரை ஜனாதிபதியின் பொது மன்னிப்பைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக விடுதலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.