நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பிடியளவு கமநிலத்துக்கு செயற்திட்டத்தின் ஊடாக நொச்சிமோட்டை கிராமத்தில் பா.யோகநந்தனுடைய காணியினை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் நடடிவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் க.விமலரூபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சரத்சந்திர, மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) நா.கமலதாசன் மற்றும் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பிடியளவு நிலம் செயற்திட்டம் மூலமாக உள்வாங்கப்பட்ட காணியில் நிலக்கடலை (கச்சான்) விதைக்கும் செயற்பாடு பிரதம விருந்தினர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




