அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்தி தேர்தலில் வெற்றி பெற்ற மற்றும் பட்டியல் ஆசனங்கள் ஊடாக தெரிவான உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று (11) திருகோணமலை ஜேகப் பார்க் தனியார் விடுதியில் குறித்த கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தலைமையில் இடம் பெற்றது.
இதில் நாடளாவிய ரீதியில் மக்கள் காங்கிரஸ் சார்பில் தெரிவான 140 உறுப்பினர்களும் கலந்து கொண்டு சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹிர், முத்து முகம்மது மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT





