அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இன்று மாலை 5.30 மணிக்கு ‘பால்கன்-9’ ராக்கெட் மூலம் ‘ஆக்சியம் ஸ்பேஸ்’ என்னும் தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம் -4’ மனித விண்வெளி பயணத்திற்கான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ டிராகன் விண்கலம் விண்ணில் ஏவப்பட இருந்தது. இந்த நிலையில் ஆக்சியம்-4 மிஷன் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று இந்த விண்கலம் ஏவப்பட இருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக இன்று மாலை விண்ணில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திரவ ஆக்சிஜன் கசிவு காரணமாக ஆக்சியம்-4 மிஷன் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ஆக்சியம்-4 மிஷன் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா, அமெரிக்காவை சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு மற்றும் போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்கின்றனர்.