முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டிற்கு தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல முன்னதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்திருந்தார். அந்த முறைப்பாடு தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அமைச்சர்களாக இருந்த பலர் வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர்.
இந்தநிலையில், அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.