நாம் வெறும் வாய்ச் சவடால்கள் விடவில்லை என ரெலோவுக்குப் பதில் கொடுக்கும் விதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் சுருக்கமான செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
”நாம் வெறும் வாய்ச் சவடால்கள் விடவில்லை. ஆரம்பத்தில் இருந்தே நீங்களும் ஏற்றுக்கொண்ட கோட்பாட்டின்படி ஒழுக வேண்டும் என்றே கேட்கின்றோம். அதை விடுத்து, எம்மை வீழ்த்துவதற்காகப் பொய்யாக கொள்கைக் கூட்டு என்று சொல்லி உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்ததாகக் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இணங்கியபடி நடந்து கொண்டால் விட்டுக் கொடுப்புக்களுக்கு இப்போதும் இடமுண்டு.” – என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT