நாட்டின் அனைத்து பயிரிடப்படாத காணிகளையும் ஒன்றாக இணைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது, விவசாய அமைச்சர் கே.டி லால் காந்த இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையுடன் இணைந்து, கந்தளாய் சீனித் தொழிற்சாலை தளத்தில் 2,000 ஏக்கர் சோள பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ADVERTISEMENT
அதன்படி, இந்த நடவடிக்கையானது நாளை(11) முதல் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் பயிரிடப்படாத நிலங்களைப் பயன்படுத்தி நாட்டின் விவசாய உற்பத்தியை மேம்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.