திருகோணமலை, ஈச்சிலம்பற்றில் இன்று காலை காட்டு யானை தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாடு பார்க்கச் சென்ற ஈச்சிலம்பற்று, பூநகர் பகுதியைச் சேர்ந்த இராசையா கணேசன் (வயது 55) என்பவரே யானை தாக்கிச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சேருநுவர திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.நூருல்லா வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு விசாரணை செய்த பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.