வீரகெட்டிய பொலிஸ் பிரிவின் அதுபோதே பகுதியில் கருவா பயிரிடப்பட்டிருந்த காணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110.46 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
தங்காலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று திங்கட்கிழமை மேற்கொண்ட விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 110 கிலோ 460 கிராம் ஹெரோயின் அடங்கிய 100 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
அதே நேரத்தில் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்த சந்தேக நபர்களை அடையாளம் காண மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.