வைகாசி விசாக பெளர்ணமி தினத்தில் மஸ்கெலியா நகரில் முச்சக்கர வண்டி சாரதிகளினால் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மஸ்கெலியா சுமனாராம விகாரையின் பௌத்த மத தேரர், மஸ்கெலியா ராணி தோட்ட அம்மன் கோவில் இந்து சமய பூசகர் மற்றும் மஸ்கெலியா இஸ்லாமிய பள்ளி வாயில் மத மௌலவி ஆகியோரின் மத அனுஸ்டிப்பிக்கு பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார மற்றும் பிரதேச சபை செயலாளர் எஸ்.ராஜவீரன் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ADVERTISEMENT






