தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக தர்மபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக நேற்று 09.06.2025 கசிப்பு உற்பத்தி நடைபெற்ற குமாரசாமிபுரம் பகுதி அமைந்துள்ள வாய்க்கால் பகுதியை பொலிஸார் சுற்றிவளைத்தனர்.
இதன் போது கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள், 80 லீட்டர் கசிப்பினையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி D.m S.k திஸ்சநாயக்க தெரிவித்துள்ளார்.

