எல்பிட்டிய பெருந்தோட்ட யாக்கத்துக்கு உரித்தான பேர்லன்ஸ், கப்புக்கொல்லை, மேல் பிரிவு, கீழ்பிரிவு, ஹேரோ கீழ்பிரிவு மற்றும் மேல் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் முதல் முறையாக இன்று கடந்த மாதம் பணியாற்றியதற்கு ரூபாய் 70000/= ஆயிரம் முதல் ரூபாய் 110000/=மேற்பட்ட ஊதியத்தை பெற்று தோட்டத்திற்கும் நிர்வாகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இவ் விடயம் தொடர்பில் தோட்ட நிர்வாக (முகாமையாளர்) திரு. டிலூக்சன் கருத்து தெரிவிக்கையில், இது எனக்கு மிகவும் சந்தோசமான தருணம் மேலும் அதிக அளவு இம்மக்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறேன் என்றும் இச் சந்தோசமான நேரத்தில் இவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு கூடிய விரைவில் இடம்பெறும் என்பதையும் மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன் என்றும் இத்தருணத்தில் எனது தோட்டத்தில் பணிபுரியும் மக்களுக்கும், உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

