ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டனர் எனக் கருதப்படும் சில அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் தற்போது வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனச் சிங்கள வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையிலேயே இவர்கள் இவ்வாறு விகாரைகள் மற்றும் கோயில்களுக்குச் சென்று வழிபடுகின்றனர் எனவும் கூறப்படுகின்றது.
கதிர்காமத்தில் அண்மைய நாட்களில் 20 இற்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் இதுவரை விசேட வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. அத்துடன், சில அரச அதிகாரிகள் அநுராதபுரம், ஸ்ரீ மகாபோதியில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவுக்குச் சென்றுள்ள சில அரசியல்வாதிகள் திருப்பதி உள்ளிட்ட தலங்களிலும் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.