• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 12, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

இன்று முதல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்.!

Mathavi by Mathavi
June 10, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
இன்று முதல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்.!
Share on FacebookShare on Twitter

தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்றின் தாக்கத்தின் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், வடமேல் மத்திய மற்றும் சப்ரகமுவ, மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

வட மாகாணத்திலும் அத்துடன் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பதுளை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

மத்திய மலைப் பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

வலுவடைந்த தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்றின் தாக்கத்தின் காரணமாக இன்று முதல் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும். ஆகையினால் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளிவிடுகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சிலாபம் தொடக்கம் புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். காற்றின் வேகம் அடிக்கடி மணித்தியாலத்திற்கு 60 – 65 கிலோமீற்றராக அதிகரித்தும் காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். சிலாபம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான அத்துடன் காங்கேசன்துறை தொடக்கம் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 55 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Related Posts

சங்கானை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்..!

சங்கானை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்..!

by Thamil
June 12, 2025
0

வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது இன்றைய தினம் (12) நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது. இதன் போது...

அகமதாபாத் விமான விபத்து ; ஜனாதிபதி அநுர இரங்கல்..!

அகமதாபாத் விமான விபத்து ; ஜனாதிபதி அநுர இரங்கல்..!

by Thamil
June 12, 2025
0

"அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக மிகுந்த கவலையடைவதாக" ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு,...

வீதிகளைத் திருத்த மண்ணை கொடுக்காமல் இராணுவத்திற்கு கொடுத்த அதிகாரிகள் – மக்கள் குற்றச்சாட்டு..!

வீதிகளைத் திருத்த மண்ணை கொடுக்காமல் இராணுவத்திற்கு கொடுத்த அதிகாரிகள் – மக்கள் குற்றச்சாட்டு..!

by Thamil
June 12, 2025
0

"சுழிபுரம் இறங்குதுறையில் இருந்து எடுத்த மண்ணை மக்களின் பாவனையில் உள்ள வீதிகளுக்கு கொடுக்காமல் இராணுவத்தினருக்கு கொடுத்ததாக" சுழிபுரம் பொதுமகன் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். வலிகாமம் மேற்கு பிரதேச...

60 அடி பள்ளத்தாக்கில் விழுந்த முச்சக்கர வண்டி..!

60 அடி பள்ளத்தாக்கில் விழுந்த முச்சக்கர வண்டி..!

by Thamil
June 12, 2025
0

பானந்துரை பிரதேசத்திலிருந்து இன்று காலை நுவரெலியா நோக்கி சென்ற முச்சக்கர வண்டி லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுகலை பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி 60 அடி பள்ளத்தாக்கில்...

தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு அல்லது மாற்றுக் காணி வழங்க ஏற்பாடு..!

தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு அல்லது மாற்றுக் காணி வழங்க ஏற்பாடு..!

by Thamil
June 12, 2025
0

"யாழ். தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு நட்டஈடு அல்லது மாற்றுக் காணிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன" என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்....

வீதி விபத்து மற்றும் மாணவர்களின் கொண்ணிலை தொடர்பான விழிப்புணர்வு..!

வீதி விபத்து மற்றும் மாணவர்களின் கொண்ணிலை தொடர்பான விழிப்புணர்வு..!

by Thamil
June 12, 2025
0

வீதி விபத்து மற்றும் மாணவர்களின் கொண்ணிலை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (12) மதியம் 12 மணியளவில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் இடம் பெற்றது. பாடசாலை அதிபர்...

காணி கபளீகர வர்த்தமானியை ஆட்சேபித்து சுமந்திரன் வழக்கு.!

காணி கபளீகர வர்த்தமானியை ஆட்சேபித்து சுமந்திரன் வழக்கு.!

by Mathavi
June 12, 2025
0

வடக்கில் சட்ட ஆவண ரீதியாக உரிமை நிரூபிக்கப்படாத தனியாரின் காணிகளை அரசு கபளீகரம் செய்வதற்கு வழி செய்யும் விதத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்ததை இடைநிறுத்தும்படி உத்தரவிடவும், செல்லுபடியற்றதாக...

சாணக்கியனின் இடத்தில் கடும் போட்டிக்கு மத்தியில் தமிழரசு வெற்றி..!

சாணக்கியனின் இடத்தில் கடும் போட்டிக்கு மத்தியில் தமிழரசு வெற்றி..!

by Thamil
June 12, 2025
0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் பிரதேசமான களுவாஞ்சிக்குடியை உள்ளடக்கிய மண்முனை தெற்கு பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவில் கடும் போட்டிக்கு...

சாவகச்சேரியில் சைக்கிளில் தெரிவான இருவருக்கு எதிரான வழக்கு நாளை..!

சாவகச்சேரியில் சைக்கிளில் தெரிவான இருவருக்கு எதிரான வழக்கு நாளை..!

by Thamil
June 12, 2025
0

சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவர் அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகப்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி