யாழ்ப்பாணம் – வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் 78 மாணவர்கள் கல்வி கற்கின்ற வரணி கரம்பைக்குறிச்சி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் கோரிக்கைக்கு அமைவாக அப் பாடசாலையில் ஏறபட்டுள்ள குடிநீர் பிரச்சினையை சீர்செய்வதற்காக ரூபா 315,000 நிதிப் பங்களிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் இன்று பொருத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை முதல்வர் என். கண்ணதாசன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர், சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்களால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இவ் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க நிர்வாகத்தினர், பெற்றோர்கள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
