• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 12, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

அத்துமீறி கட்டப்பட்டுள்ள விகாரைகளுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு பணியகம் வேண்டுகோள்..!

Thamil by Thamil
June 9, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
அத்துமீறி கட்டப்பட்டுள்ள விகாரைகளுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு பணியகம் வேண்டுகோள்..!
Share on FacebookShare on Twitter

வட,கிழக்கில் அத்துமீறி கட்டப்பட்டுள்ள விகாரைகளுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு சிங்கள மக்களிடம் வடமாகாண நீதி சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது

வட கிழக்கில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக வடமாகாண நீதி சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியக இயக்குனர் அருட்பணி சூ.யே. ஜீவரட்ணம் அ.ம.தி கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,”யுத்தத்தின் பிற்பாடு ஏறக்குறைய 16 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் தேசிய ஒருமைப்பாட்டையும் இன, மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டிய காலத்தில் இவற்றையெல்லாம் விடுத்து இன்னும் அடக்குமுறைகளும் உரிமை மறுப்புக்களும் தான்தோன்றித்தனமான பொறுப்பற்ற அரசியல் அதிகார வீச்சுக்களும் சிறுபான்மை இன மக்களை நோக்கி அவ்வப்போது செயற்படுத்தப்பட்டு கொண்டிருப்பது வேதனை அளிக்கின்றது.

ADVERTISEMENT

கடந்த பங்குனி மாதம் 28 ஆம் திகதி காணி நிர்ணய உரிமைச்சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டிருந்த அரசு வர்த்தமானியானது தமிழ் மக்களினுடைய காணிகளை அபகரிக்கின்ற நோக்கமாக கொண்டது என்று பல தரப்புக்களும் அச்சம் வெளியிட்டு கண்டனங்களை தெரிவித்தபோது இறுதியில் அதை இரத்து செய்தமையை வரவேற்கின்ற வேளை, இன்னும் இன, மத, சமூக நல்லிணக்கத்திற்கு பாதகத்தை விளைவிக்கும் செயற்பாடான தனியார் காணிகளுக்குள் அத்துமீறிய பௌத்த விகாரைகளின் கட்டுமானங்கள் மற்றும் புராதன தொல்பொருள் இடங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் எந்த வித அகழ்வு மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள முடியாது என்று சொல்லப்படுகின்ற இடங்களில் பௌத்த விகாரைகளின் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்ற சூழ்நிலைகள் எல்லாம் வெளிப்படையாக மத வேறுபாட்டையும் பிரிவினை மனப்பான்மையையும் அதிகார வாக்கம் வெளிப்படுத்துகிறது. இதை வடமாகாண நீதி சமாதான நல்லிணக்கத்திற்கான பணியகம் வன்மையாக கண்டிக்கிறது.

அதேவேளை வட கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் உரித்துக்காணிகளை கையகப்படுத்தி, தனியார் காணிகளுக்குள் அத்துமீறி கட்டப்படுகின்ற விகாரைகளை நோக்கி பௌர்ணமி தினங்களிலும், விடுமுறை நாட்களிலும் வருகின்ற பௌத்த மத சகோதர சகோதரிகளுக்கு ஒரு பகிரங்க வேண்டுகோளையும் விடுக்கிறது.

அத்துமீறி அடுத்தவர் காணிகளுக்குள் கட்டப்படுகின்ற மத தலங்களில் ஆன்மீகத்தை தேடுவது அர்த்தமற்றதும் அநியாயமானதும் என்பதை புரிந்து கொண்டு வட கிழக்கு மாகாணங்களில் சட்ட விரோத இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மத வழிபாட்டுத்தலங்களை நோக்கிய தங்களின் ஆன்மீக பயணங்கள் வேதனையளிக்கிறது என்பதை புரிந்துகொண்டு நல்மனதோடு அவற்றை தவிர்த்து தமிழ் மக்களின் உரிமைகளை அங்கிகரித்து அவர்களுக்குரிய காணிகளை மீள ஒப்படைக்க முயற்சிப்பதும் உங்களுடைய கடமை என்பதையும் வலியுறுத்துகின்றோம்.

அது மாத்திரம் இன்றி தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யக்கூடிய வளமான நிலங்கள், காணிகள் எல்லாம் இராணுவ கட்டுப்பாட்டுக்கு கீழ் இருந்து அவற்றை எல்லாம் விடுவிக்க வேண்டிய தேவைப்பாடு உணரப்படுகின்ற வேளை இப்படியான காணி அபகரிப்பு செயற்பாடுகள் தடை செய்யப்பட வேண்டும் என்பதையும் நீதி சமாதான நல்லிணக்கத்திற்குமான பணியகம் வலியுறுத்த விரும்புகின்றது” என்றுள்ளது.

Related Posts

அகமதாபாத் விமான விபத்து ; ஜனாதிபதி அநுர இரங்கல்..!

அகமதாபாத் விமான விபத்து ; ஜனாதிபதி அநுர இரங்கல்..!

by Thamil
June 12, 2025
0

"அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக மிகுந்த கவலையடைவதாக" ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு,...

வீதிகளைத் திருத்த மண்ணை கொடுக்காமல் இராணுவத்திற்கு கொடுத்த அதிகாரிகள் – மக்கள் குற்றச்சாட்டு..!

வீதிகளைத் திருத்த மண்ணை கொடுக்காமல் இராணுவத்திற்கு கொடுத்த அதிகாரிகள் – மக்கள் குற்றச்சாட்டு..!

by Thamil
June 12, 2025
0

"சுழிபுரம் இறங்குதுறையில் இருந்து எடுத்த மண்ணை மக்களின் பாவனையில் உள்ள வீதிகளுக்கு கொடுக்காமல் இராணுவத்தினருக்கு கொடுத்ததாக" சுழிபுரம் பொதுமகன் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். வலிகாமம் மேற்கு பிரதேச...

60 அடி பள்ளத்தாக்கில் விழுந்த முச்சக்கர வண்டி..!

60 அடி பள்ளத்தாக்கில் விழுந்த முச்சக்கர வண்டி..!

by Thamil
June 12, 2025
0

பானந்துரை பிரதேசத்திலிருந்து இன்று காலை நுவரெலியா நோக்கி சென்ற முச்சக்கர வண்டி லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுகலை பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி 60 அடி பள்ளத்தாக்கில்...

தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு அல்லது மாற்றுக் காணி வழங்க ஏற்பாடு..!

தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு அல்லது மாற்றுக் காணி வழங்க ஏற்பாடு..!

by Thamil
June 12, 2025
0

"யாழ். தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு நட்டஈடு அல்லது மாற்றுக் காணிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன" என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்....

வீதி விபத்து மற்றும் மாணவர்களின் கொண்ணிலை தொடர்பான விழிப்புணர்வு..!

வீதி விபத்து மற்றும் மாணவர்களின் கொண்ணிலை தொடர்பான விழிப்புணர்வு..!

by Thamil
June 12, 2025
0

வீதி விபத்து மற்றும் மாணவர்களின் கொண்ணிலை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (12) மதியம் 12 மணியளவில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் இடம் பெற்றது. பாடசாலை அதிபர்...

காணி கபளீகர வர்த்தமானியை ஆட்சேபித்து சுமந்திரன் வழக்கு.!

காணி கபளீகர வர்த்தமானியை ஆட்சேபித்து சுமந்திரன் வழக்கு.!

by Mathavi
June 12, 2025
0

வடக்கில் சட்ட ஆவண ரீதியாக உரிமை நிரூபிக்கப்படாத தனியாரின் காணிகளை அரசு கபளீகரம் செய்வதற்கு வழி செய்யும் விதத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்ததை இடைநிறுத்தும்படி உத்தரவிடவும், செல்லுபடியற்றதாக...

சாணக்கியனின் இடத்தில் கடும் போட்டிக்கு மத்தியில் தமிழரசு வெற்றி..!

சாணக்கியனின் இடத்தில் கடும் போட்டிக்கு மத்தியில் தமிழரசு வெற்றி..!

by Thamil
June 12, 2025
0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் பிரதேசமான களுவாஞ்சிக்குடியை உள்ளடக்கிய மண்முனை தெற்கு பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவில் கடும் போட்டிக்கு...

சாவகச்சேரியில் சைக்கிளில் தெரிவான இருவருக்கு எதிரான வழக்கு நாளை..!

சாவகச்சேரியில் சைக்கிளில் தெரிவான இருவருக்கு எதிரான வழக்கு நாளை..!

by Thamil
June 12, 2025
0

சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவர் அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகப்...

வெருகல் படு கொ*லையின் 39 ஆவது நினைவேந்தல்..!

வெருகல் படு கொ*லையின் 39 ஆவது நினைவேந்தல்..!

by Thamil
June 12, 2025
0

திருகோணமலை, வெருகல் படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு வெருகல் – பூநகர் பகுதியில் இன்று (12) வியாழக்கிழமை மிகவும் உணர்வுபூர்வமான முறையில் நினைவுகூரப்பட்டது. வெருகல் - ஈச்சிலம்பற்று...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி