குளியாப்பிட்டிய – வல்பிடகம பிரதேசத்தில் பெண்ணொருவர் கூரிய மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 44 வயதுடைய வடுமுன்னேகெதர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மண்வெட்டியைக் கொண்டு கணவன் தாக்கியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ADVERTISEMENT
சடலம் தற்போது குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாது.
43 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.