வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்றைய தினம் 09.06.2025 நடைபெற்று வருகின்றது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை ஆகவும் பாற்செம்பு, காவடி, தீச்சட்டி என பல்வேறு வகையான நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
ஆலயத்துக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவதுடன் முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரத் திணைக்களத்தினர் தமது சுகாதார நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
ADVERTISEMENT









