ஹெரோயின் மற்றும் கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் யாழ்ப்பாண மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒருவரிடம் இருந்து 2 கிலோ 100 கிராம் கஞ்சாவும், மற்றைய நபரிடம் இருந்து 3 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நேற்று யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ADVERTISEMENT