மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தடைபட்ட காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். அடுத்தவர்களின் ஆதரவை முழுமையாக பெறுவீர்கள். உங்களுக்கு தடையாக பேசியவர்கள் எல்லாம், நீங்கள் சொன்னது சரி என்று பேசும் அளவுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பெரிய பிரச்சினையில் இருந்து விடுதலை கிடைக்கும். சங்கடத்தோடு இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். வேலையில் இருந்து வந்த பிரச்சினை, வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சினைகளை எல்லாம் சுக்கு நூறாக உடைத்து விடுவார் அந்த முருகப்பெருமான்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு தேவையற்ற மனப் பயம் குழப்பம் எல்லாம் இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள தயக்கம் இருக்கும் வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன பிரச்சினைகள் வரலாம். எதற்கும் பயப்படாதீங்க. முருகா முருகா என்று சொல்லி இந்த நாளை துவங்குங்கள். நிச்சயம் பிரச்சனைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல வேலைகளை செய்யும் போது சில தடைகள் வரும். சிக்கல்கள் வரும். இருந்தாலும் உங்களுடைய இறை நம்பிக்கை உங்களை காப்பாற்றி விடும். கடைசி நிமிஷத்தில் உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். மனநிம்மதியை அடைவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் வசூல் ஆகாத பணம் வசூலாகும். உங்களுடைய பண பிரச்சினையும் தீரும். மன நிம்மதி கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு இருக்கும். எந்த வேலையிலும் ஆர்வம் இருக்காது. இதனால் வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன கெட்ட பெயர் வர வாய்ப்புகள் உள்ளது. கவலைப்படாதீங்க, காலையில் முருகரைக் கும்பிடுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாளாக இருக்கும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். கொஞ்ச நேரம் கூட மூச்சு விடுவதற்கு நேரம் இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நேரத்திற்கு சரியாக சாப்பிடுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று காலையில் கொஞ்சம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். ஆன்மீக வேலை, வீட்டு வேலை இதில் உங்களுடைய கவனம் சிதறிவிடும். இதனால் அலுவலக வேலை வியாபாரத்தில் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. யாருக்கும் அனாவசியமாக வாக்கு கொடுக்காதீங்க. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு முக்கியமான வேலைகளை முடித்து விடுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று பொதுப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். நாலு பேருக்கு உதவுவதற்கு முருக பெருமான் உங்களுக்கு நிறைய வாய்ப்பை கொடுக்க போகின்றான். வேலை வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாலு பேருக்காவது நீர், மோர் தானம் செய்யுங்கள். நன்மை நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட நாள் பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள். மனது சந்தோஷம் அடைவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுபச் செலவுகள் ஏற்படும். தவறாமல் முருகருக்கு 6 நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். மேலும் நன்மைகளை அடைவீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். அடுத்தவர்கள் பேசுவதை காதில் வாங்கிக் கொள்ள மாட்டீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனை சரியாகும். ஆரோக்கியம் மேம்படும். நீண்ட தூர பயணங்களில் மட்டும் கவனம் இருக்கட்டும். எப்படியாவது ஒருமுறை இன்று கந்தசஷ்டி கவசத்தை முழுசாக காதல் கேட்டு விடுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். வேலை வியாபாரம் எல்லா விஷயத்திலும் பிசியாக தான் இருப்பீங்க. ஆனா நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல முருகர் தரிசனமும் கிடைக்கும். மன நிம்மதி ஏற்படும். வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். இரண்டு பேருக்கு உங்கள் கையால் முருகா முருகா என்ற பெயரை சொல்லி உணவு வாங்கி அன்னதானம் செய்யுங்கள்.