• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 19, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

யாழில் 17 சபைகளிலும் ஆட்சியமைப்போம்! – சுமந்திரன் சூளுரை

Sangeetha by Sangeetha
June 8, 2025
in இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்
0 0
0
யாழில் 17 சபைகளிலும் ஆட்சியமைப்போம்! – சுமந்திரன் சூளுரை
Share on FacebookShare on Twitter

“எந்தக் கட்சிக்குக் கூடுதலான ஆசனங்கள் இருக்கின்றனவோ அந்தக் கட்சிக்கு ஆதரவளிப்போம் என்று கூறியவர்கள் திடீரெனக் கட்சி என்ற சொற்பதத்தைத் தவிர்த்து அணி எனச் சொல்லத் தொடங்கினார்கள். உதிரிகளை இணைத்துக்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியைவிட அதிக ஆசனங்கள் உள்ள அணி என்கின்றார்கள். மக்களின் தீர்ப்பு அப்படி வழங்கப்படவில்லை. உதிரிகளை இணைத்து அணியாக நின்றால்தான் தமிழரசை வீழ்த்த முடியும் என்கின்றனர். அவர்களுக்கு வெட்கம், மானம், ரோசம் இல்லாமல் போய்விட்டது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் நாம் ஆட்சியமைப்போம்.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு யாழ்ப்பாணம், நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ADVERTISEMENT

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“ஏனைய கட்சிகளைப் போல் ஒரு கூட்டத்தை ஒழுங்குபடுத்திவிட்டு அந்த விடயம் வெளியில் தெரியவந்தவுடன் காலவரையின்றி பிற்போட்டுவிட்டோம் என்று சொல்வதும், அந்தக் கட்சியில் இருந்து இன்னொருவர் அப்படி ஒரு கூட்டம் நடக்கவே இல்லை, ஊடகங்கள் பொய் சொல்கின்றன எனப் பொய்களைச் சொல்லும் வழக்கம் எங்களுடைய கட்சியில் இல்லை. ஆகவே, கட்சியின் நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்திய கட்சியின் தலைவருக்கு நன்றி சொல்லக்  கடமைப்பட்டுள்ளோம்.

சமஷ்டி அடிப்படையில் மக்களுக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதே இலங்கைத் தமிழரசுக்  கட்சியாகும். 1956ஆம் ஆண்டு முதல் சகல தேர்தல்களிலும் எமது கட்சி போட்டியிடுகின்றது. தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கும் ஒரேயொரு கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகும். அதற்காக நாங்கள் ஏனைய கட்சிகளைப் புறக்கணிக்கவில்லை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுற்ற கையோடு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மக்களுடைய ஆணையை ஏற்றுக்கொள்கின்றோம் என்பதைக் குறிப்பிட்டிருந்தோம். மக்கள் தவறு இழைத்தார்கள் என எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் கூறவில்லை.

ஆட்சி முறை மாற்றப்பட வேண்டும் என 1956ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை மக்கள் வழங்கிய ஜனநாயகத் தீர்ப்பை இந்த நாட்டின் அரசுகள் கண்டுகொள்வதில்லை. மக்கள் தீர்ப்பை அரசு ஏற்க வேண்டும் எனத்  தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். தற்போது இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை மதியுங்கள் என ஏனைய கட்சிகளுக்குக் கூறுகின்றோம்.

ஒரு குறித்த சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குக் கூடுதலான மக்கள் ஆதரவு கிடைக்கப் பெறுகின்றபோது அந்தத் மக்கள் தீர்ப்பை மதித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஆதரவளிக்க வேண்டியது ஏனைய கட்சிகளின் ஜனநாயகக் கடமை ஆகும். இதனை அரசியல் குழுக் கூட்டத்திலும் வலியுறுத்தியிருந்தோம். இதனைப் பகிரங்கமாக ஏனைய கட்சிகளுக்கும் சொல்லியிருக்கின்றோம்.

உள்ளூராட்சி சபைகளில் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க வேண்டிய தேவை இல்லை. மக்களின் கைகளுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே போட்டியிட்டோம். எனவே, மக்களின் ஆணை எங்களுக்கு உள்ள இடங்களில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக ஒழுங்குகளை செய்வோம்.

எங்கள் கட்சியின் கடந்த சில நாட்களில் இடம்பெற்ற சந்திப்புக்கள் சம்பந்தமாக உணர்வுபூர்வமான கருத்துக்கள் எழுந்துள்ளன. அதனைப்  புறந்தள்ளாது நாங்கள் மதிக்கின்றோம். தமிழரசுக் கட்சியின் தலைவர் ஏனைய கட்சிகளைத் தேடிச் சந்திப்பது பற்றி நாங்கள் கூறியபோது, நாங்கள் சந்திப்பை ஒழுங்குபடுத்தியதனால் நாங்களே தேடிச் சென்று சந்திக்க வேண்டும் என்பதை எங்கள் கட்சித் தலைவர் சொன்னார்.

கஜேந்திரகுமாருடனான சந்திப்பு அவருடைய இல்லத்திலேயே ஒழுங்கு செய்யப்பட்டது. எனக்குக் கஜேந்திரகுமாரின் எண்ணம் பற்றித்  தெரியும். எனவே, நானும் அதற்கு இணங்கினேன். எனினும், இடையில் கஜேந்திரகுமார் ஊடகச் சந்திப்பில் தும்புத்தடிக் கதையைச் சொன்னார். அதன் பின்னர் கட்சிக்குள் சலசலப்பு எழுந்ததாலேயே இடத்தை மாற்றினோம். எனினும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்னைப் பார்த்து தும்புத்தடி என்று கூறவில்லை. தன்னுடைய கட்சியில் இருந்து முதலமைச்சராக நிறுத்தப்படவுள்ளவர்தான் தும்புத்தடி என்றார். யார் அந்தத் தும்புத்தடி என்பதை அறிய நாங்கள் ஆவலாக எதிர்பார்த்திருக்கின்றோம்.

நாங்கள் எவருடனும் கூட்டுச் சேரவில்லை. மக்கள் எங்களுக்குக்  கொடுத்த ஆணையின் பிரகாரம் நாங்கள் அதிகாரத்தைப் பெறக் கூடிய ஓர் அரசியல் கட்சி. அந்த அதிகாரத்தைப் பெறுவதற்கு மக்கள் தீர்ப்பளித்த பிற்பாடு அதற்குக் குறுக்காக எவரும் வரக்கூடாது என நாங்கள் ஏனைய கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம்.

தமிழரசுக் கட்சியை விட ஆசனங்கள் குறைந்த கட்சி இன்னொரு கட்சியுடன் அணி சேர்ந்துவிட்டு எங்களைவிடக் கூட ஆசனங்களை வைத்திருப்பதாகக் கூறும் பம்மாத்து வேலையை எங்களிடம் செய்ய முடியாது.

எந்தக் கட்சிக்குக் கூடுதலான ஆசனங்கள் இருக்கின்றனவோ அந்தக் கட்சிக்கு ஆதரவளிப்போம் என்று கூறியவர்கள் திடீரெனக் கட்சி என்ற சொற்பதத்தைத் தவிர்த்து அணி எனச் சொல்லத் தொடங்கினார்கள். உதிரிகளை இணைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சியைவிட அதிக ஆசனங்கள் உள்ள அணி என்கிறார்கள். மக்களின் தீர்ப்பு அப்படி வழங்கப்படவில்லை. உதிரிகளை இணைத்து அணியாக நின்றால்தான் தமிழரசை வீழ்த்த முடியும் என்கின்றனர். அவர்களுக்கு வெட்கம், மானம், ரோசம் இல்லாமல் போய்விட்டது.

இருட்டில் போய் ஏனைய கட்சிகளைச் சந்திப்பது, பின்னர் அது வெளிவந்ததும் நாங்கள் சந்திக்கவில்லை என்பது, கண்டவர்களையும் சேர்த்து அணியாகக் காட்டிக்கொண்டு தமிழரசை வீழ்த்தப் போவதாகக் கூறுவது என இவை அனைத்தும் மக்கள் முன் எடுபடாது. மக்கள் ஆணை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 17 சபைகளிலும் ஆட்சியமைப்போம்.

பலர் புதிய அணிகளை உருவாக்கியும் தேசிய மக்கள் சக்தியை மேவி வரமுடியவில்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டுமே தேசிய மக்கள் சக்தியைத் தோற்கடித்தது. ஆகவே, மக்களின் ஆணையைப் பெற்ற நாங்கள் எல்லா சபைகளிலும் நிர்வாகத்தை அமைப்பதற்கு உரித்துடையவர்கள். குறுக்கே எவரும் வரவேண்டாம் என்ற எச்சரிக்கையை ஏனைய கட்சிகளுக்கு விடுக்கின்றேன்.” – என்றார்.

Related Posts

குடை சாய்ந்த உழவு இயந்திரம்..!

குடை சாய்ந்த உழவு இயந்திரம்..!

by Thamil
June 19, 2025
0

இன்று (19) நுவரெலியா - உடபுஸ்ஸல்லாவ வீதியில் உள்ள ஹல்கிரானோயா பகுதியில் தேயிலை தொழிற்சாலைக்குச் சொந்தமான உழவு இயந்திரம் ஒன்று குடை சாய்ந்தது. இடம்பெற்ற இவ் விபத்தில்...

வத்திராயனில் இடம்பெற்ற இளைஞர் கழகத்திற்கான பொதுக்கூட்டம்..!

வத்திராயனில் இடம்பெற்ற இளைஞர் கழகத்திற்கான பொதுக்கூட்டம்..!

by Thamil
June 19, 2025
0

வடமராட்சிக் கிழக்கு வத்திராயன் சொலிட் இளைஞர் கழகத்திற்கான பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் இன்று (19) இடம்பெற்றது. இன்று மாலை 4.00 மணிக்கு வடமராட்சி கிழக்கு வத்திராயன்...

வன விலங்குகளால் ஏற்படும் விவசாய சேதங்கள் தொடர்பான கலந்துரையாடல்..!

வன விலங்குகளால் ஏற்படும் விவசாய சேதங்கள் தொடர்பான கலந்துரையாடல்..!

by Thamil
June 19, 2025
0

வனவிலங்குகளால் உணவு உற்பத்திக்கு (விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை) ஏற்படும் சேதங்களை விஞ்ஞான பொறிமுறை ஊடாக முகாமைத்துவம் செய்வதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் நிலையான தீர்வுகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர்...

யாழில் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞன்..!

யாழில் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞன்..!

by Thamil
June 19, 2025
0

இன்றைய தினம் (19) குருநகர் வைத்தியசாலைக்கு முன்பாக கஞ்சா கலந்த மாவா வைத்திருந்த 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்...

அநுர அரசின் ஒடுக்குமுறைக்கு முகங்கொடுக்கத் தயார் – நாமல் தெரிவிப்பு..!

அநுர அரசின் ஒடுக்குமுறைக்கு முகங்கொடுக்கத் தயார் – நாமல் தெரிவிப்பு..!

by Thamil
June 19, 2025
0

"எமக்கு எந்தவொரு தரப்புடனும் 'டீல்' கிடையாது. அநுர அரசின் ஒடுக்குமுறைக்கு முகங்கொடுக்கத் தயார். எமது அரசியல் பயணத்தை நிறுத்தப்போவதில்லை” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய...

சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் இடம்பெற்ற பயிற்சிப் பட்டறை..!

சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் இடம்பெற்ற பயிற்சிப் பட்டறை..!

by Thamil
June 19, 2025
0

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும், கல்வி அமைச்சும் இணைந்து முன்னெடுக்கும் பாடசாலை சிறுவர் பாதுகாப்புக் குழு வேலைத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான சான்றிதழ் வழங்குதல்...

இன்று கைதான கெஹெலியவின் இரு மகள்களும் மருமகனும் பிணையில் விடுவிப்பு..!

இன்று கைதான கெஹெலியவின் இரு மகள்களும் மருமகனும் பிணையில் விடுவிப்பு..!

by Thamil
June 19, 2025
0

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று வியாழக்கிழமை முற்பகல் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் மற்றைய இரு மகள்களையும், மருமகனையும் பிணையில்...

செம்மணியில் நாளை வெடிக்கவுள்ள மாபெரும் போராட்டம்..!

செம்மணியில் நாளை வெடிக்கவுள்ள மாபெரும் போராட்டம்..!

by Thamil
June 19, 2025
0

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது. வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் செம்மணிப் பகுதியில் நாளை வெள்ளிக்கிழமை காலை...

மட்டக்களப்பு மாநகர சபையின் பொதுக் கூட்டம் இன்று இடம்பெற்றது..!

மட்டக்களப்பு மாநகர சபையின் பொதுக் கூட்டம் இன்று இடம்பெற்றது..!

by Thamil
June 19, 2025
0

மட்டக்களப்பு மாநகரசபையின் எட்டாவது சபையின் இரண்டாவது பொதுக் கூட்டம் இன்றைய தினம் (19) மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் மாநகர சபா மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி