வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் நெல்லியடி முன்பள்ளி விளையாட்டு விழா சபை செயலாளர் கணேசன் ஹம்சநாதன் தலமையில் யா.வதிரி திருஇருதய கல்லூரி மைதானத்தில் இன்று 08/06/2025 பிற்பகல் 2:00 மணியளவில் ஆரம்பமானது. நிகழ்வின் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு முன்பள்ளி மாணவர்களின் பாண்ட் இசை முழங்க விளையாட்டு மைதானம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு மங்கல விளக்கு ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
மங்கல சுடர்களை பிரதம விருந்தினரும், ஓய்வு பெற்ற இலங்கை நிர்வாக சபை விசேட தர அதிகாரியுமான இராசரட்ணம் வரதீஸ்வரன், திருமதி வரதீஸ்வரன், கிறிஸ்தவ குரு முதல்வர் வணக்கத்திற்குரிய வி.ஜி.குணநாயகம் அடிகளார், அருட்சகோதரி அனன்சியா முன்பள்ளி ஆசிரியை ர.தாரணி, மாணவன் ம.அஸ்வந்தேவ் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை செயலாளர் கணேசன் ஹம்சநாதன், ஆகியோர் ஏற்றினர்.
தொடர்ந்து தேசியக் கொடியினை நிகழ்வின் பிரதமவிருந்தினர் இராசரட்ணம் வரதீஸ்வரன் ஏற்றிவைத்ததை தொடர்ந்து சபை கொடியினை சபை செயலாளர் ஏற்றினார் .அதனை தொடர்ந்து முன்பள்ளி கொடியினை முன்பள்ளி ஆசிரியர் ஏற்றினார்.
விளையாட்டு நிகழ்வுகளை பிரதம விருந்தினர் சம்பிர்தாயபூர்வமாக ஆரம்பித்துவைக்க ஒலிம்பிக் தீபம் ஏற்றிவைக்கப்பட்டதை தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை நிகழ்வின் பிரதம, சிறப்பு, கௌரவ விருந்தினர்கள் வழங்கி கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உத்தியோகத்தர்கள், முன்பள்ளுகளின் ஆசிரியர்கள், முன்பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தித்தனர்.


