தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தோனேசியாவின் மேடன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், இன்று(06/08) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்ததாக விமான நிலைய அதிகாரி உறுதிப்படுத்தினார்.
இதுஏர்பஸ் A320 விமானம் என்றும், 93 பயணிகள் மற்றும் 08 பணியாளர்களுடன் 06/05 அன்று அதிகாலை 01.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்டது என்றும் விமான நிலைய அதிகாரி உறுதிப்படுத்தினார்.
இந்தோனேசிய வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, நாட்டின் ஒரு சிறிய பிராந்திய விமான நிலையமான மேடன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பின்னர், அந்த விமான நிலையத்தில் விமானத்தை சரிசெய்ய வசதிகள் இல்லாததால்,சிறிலங்கன் ஏர்லைன்ஸ் பொறியாளர்கள் குழு ஒன்று 06/06 அன்று மதியம் 01.45 மணிக்கு சிறப்பு விமானத்தில் மேடன் விமான நிலையத்திற்கு தேவையான உதிரிப்பாகங்களுடன் புறப்பட்டது.
விமானத்தை பழுதுபார்த்த பிறகு, பொறியாளர்கள் குழு இன்று(06/08) காலை 07.55 மணிக்கு மேடன் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-303 உடன் வந்தடைந்தது.