மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வீண் குழப்பங்கள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. தேவையற்ற மன கவலை இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது சின்ன தடைகள் ஏற்படலாம். ஆகவே இன்று ஈசனை வழிபாடு செய்து விட்டு, உங்களுடைய முக்கியமான வேலையை துவங்குங்கள். சுப காரியங்களையும், முக்கியமான வேலைகளையும் அடுத்த நாள் தள்ளிப் போட முடியும் என்றால், நாளைய தினம் தள்ளி வைத்துக் கொள்வது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்ய தயாராகி விடுவீர்கள். கடன் சுமை குறையும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சின்னதாக சுப செலவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் இருக்கும் பெண்கள் ஆரோக்கியத்தில் கொஞ்சும் கவனம் செலுத்த வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். முக்கியமான வேலைகளை முன்கூட்டியே முடித்து விட வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சோம்பேறி தனத்தோடு இருக்கக் கூடாது. ஜாக்கிரதை. வீட்டில் இருக்கும் பெண்கள் பெரியவர்களை அனுசரித்து செல்லுங்கள். வார்த்தைகளை கவனமாக பேசுங்கள்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று இரக்க குணம் இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டில் இருந்து வந்த கணவன் மனைவி பிரச்சனை சரியாகும். வேலையை சரிவர செய்ய உங்களால் முயன்ற அளவுக்கு முயற்சிகளை போடுவீர்கள். அதற்கான வெற்றியையும் அடைவதற்கு இறைவன் உங்களுக்கான ஆசியை வழங்குவான்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்லது நடக்கும். நிறைய பேரு உங்களுக்கு உதவி செய்வார்கள். இறைவனின் ஆசிர்வாதத்தை பரிபூரணமாக பெறுவீர்கள். ஆன்மீக சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் இருக்கக்கூடிய பிரச்சனைகளை சரி செய்ய நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு வெளிப்படும் நாளாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் தீரும். காதல் கைகூடும். வீட்டில் கெட்டி மேல சத்தம் கேட்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவு படுத்தவும் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். வியாபாரத்தை பொறுத்தவரை கொஞ்சம் மந்தமான போக்கு நிலவும். கவலைப்பட வேண்டாம். நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இல்லை. வியாபாரத்தை முன்னேற்றம் உண்டான வழிகளை தேடுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். யாரை நம்ப வேண்டும், யாரை நம்ப கூடாது என்று சிந்தித்து செயல்படுங்கள். எல்லா விஷயங்களையும் வெளிப்படையாக பேசக்கூடாது. குறிப்பாக குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது. புதிய மனிதர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். சிவனை இன்று தவறாமல் வழிபாடு செய்யுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று கூட்டு முயற்சியில் ஈடுபட வேண்டாம். மூன்றாவது நபரை முழுசாக நம்ப வேண்டாம். உங்களுடைய வேலையை நீங்களே உங்கள் கண் பார்வையின் மூலம் செய்து முடிப்பது மட்டும்தான் நன்மையை ஏற்படுத்தும். அடுத்தவர்களை முழுசாக நம்பும் போது ஏமாற வாய்ப்புகள் உள்ளது ஜாக்கிரதை. பிரதோஷ நேரத்தில் ஈசனை வணங்குவது நல்லது
மகரம்
மகர ராசி காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்திலும் வேலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடை விலகும். இல்லத்தரசிகள் வீட்டில் பொன் பொருள் சேர்க்கை செய்வதற்கான நல்ல வாய்ப்பு. பெண்களின் மனது இன்று சந்தோஷப்படும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்தோடு இருப்பீர்கள். விடுமுறை நாளாகவே இருந்தாலும் உங்களுடைய வேலைகளை சரியாக முடித்து விடுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை சுத்தம் செய்வது, பழுது போன பொருட்களை சரி பார்ப்பது, இது போன்ற வேலைகளை செய்து இந்த நாளை உபயோகமாக பயன்படுத்திக் கொள்வீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று நிறைய ஓய்வு எடுக்க போகிறீர்கள். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் உங்களுக்கு இருக்கும். ராஜபோக வாழ்க்கை தான். இருந்தாலும் ஆரோக்கியத்தில் கொஞ்சும் கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கை துணையோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம். எதுவாக இருந்தாலும் அனுசரணையோடு நடந்து கொள்ளுங்கள்.