• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 14, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

வன்னிக்காடு படைப்பை உருவாக்குவதே எனது இலக்கு – இயக்குனர் கௌதமன் சூளுரை.!

Mathavi by Mathavi
June 7, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
வன்னிக்காடு படைப்பை உருவாக்குவதே எனது இலக்கு – இயக்குனர் கௌதமன் சூளுரை.!
Share on FacebookShare on Twitter

திரைப்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை இயக்கும் பிரபல இயக்குனரான வ. கெளதமன் இயக்கி நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

ஈழத்து உறவுகள் இறுதி யுத்தத்தில் எதிர்நோக்கிய வலிகளையும் வாழ்க்கையையும் வெளிப்படுத்தும் முகமாக வன்னிக்காடு படைப்பை உருவாக்குவதே எனது இலக்கு என இயக்குநர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

நிர்மல் சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வ. கெளதமன் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ்குமாரும் பின்னணி இசைக்கு சாம் சி. எஸ்.சும் பொறுப்பேற்றுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்ள சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

ADVERTISEMENT

வ. கெளதமன், E. குறளமுதன், U.M. உமாதேவன், கே. பாஸ்கர், கே. பரமேஸ்வரி ஆகியோர் வி.கே. புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். சமுத்திரக்கனி, பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், சாய் தீனா, ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான், ஏ.எல். அழகப்பன், மதுசூதன ராவ், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், தமிழ் கெளதமன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

வைரமுத்து பாடல்களை எழுத, கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது படத்தொகுப்பை கவனிக்க, நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் சண்டைப் பயிற்சியை ஸ்டண்ட் சில்வாவும் கையாண்டுள்ளனர்.

இந்த இசை வெளியீட்டு விழாவில்’படையாண்ட மாவீரா’ படத்தின் இயக்குநரும் நாயகனுமான வ. கெளதமன் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த மண்ணையும் மக்களையும் நேசிப்பது போலவே மற்றொருபுறம் எனது திரைத்துறையையும் நான் நேசிக்கிறேன். இது நான் இயக்கி நடித்திருக்கிற படைப்பு. உண்மையில் ஒரு படைப்பாளியின் படைப்பு தான் பேச வேண்டுமே தவிர அவன் பேசக்கூடாது என நான் நினைப்பேன். ஆனாலும் இந்த படத்தை பற்றி நான் பேசவேண்டியுள்ளது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் என் மீது மிகுந்த அக்கறை கொண்டு இந்த படத்தை உருவாக்க முன்வந்தார்கள். திரைத்துறையின் நான் இன்னும் அதிகம் சாதிக்க வேண்டும் என விரும்பினார்கள். மக்களுக்கான கதையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என விரும்பினோம். இவற்றின் விளைவு தான் ‘படையாண்ட மாவீரா’.

இப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து இணைந்து மிகச் சிறந்த பாடல்களை வழங்கியுள்ளார்கள். புலிக்கொடி பாடல் உணர்வுப்பூர்வமாகவும், ஜிவி பிரகாஷும் மது ஸ்ரீயும் பாடிய பட்டாம்பூச்சி பாடல் அழகுணர்ச்சியுடனும் அமைந்துள்ளன. சாம் சி. எஸ். சிறப்பான பின்னணி இசையை தந்துள்ளார்.

இப்படத்தின் முன்னோட்டம், பாடல்கள் மிகுந்த சிலிர்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக அனைவரும் கூறினீர்கள், மிக்க நன்றி. முழுப்படத்தையும் பார்த்ததும் உங்கள் உள்ளங்களில் பேரதிர்வை அது ஏற்படுத்தும், அது உறுதி.

எத்தனையோ படங்களுக்காகவும் எத்தனையோ பிரச்சினைகளுக்காகவும் நான் குரல் கொடுத்த போதெல்லாம் அமைதியாக எனக்கு எந்த சாயமும் பூசாமல் இருந்தவர்கள் காடுவெட்டி குரு அவர்கள் பற்றியும் ஒரு சமுதாயத்தை பற்றியும் தவறாக திரைப்படத்தில் காட்டிய போது அதற்கு எதிராக நான் நியாயமான கேள்விகளை எழுப்பியவுடன் என் மீது சாதி சாயம் பூசினார்கள். அந்த சமயத்தில் கௌதமன் கேட்டதில் என்ன தவறு என்று எனக்குத் தெரிந்த ஒரு ஊடக நண்பர், அப்படத்தின் இயக்குநரிடம் கேட்டபோது நான் தான் தாதா போன்று ரவுடி போன்று காட்டிவிட்டேன், வேண்டுமானால் ‘சந்தனக்காடு’ எடுத்தது போன்று குரு அவர்களை வாழ்க்கையை பற்றியும் கௌதமன் ஒரு படம் எடுக்கட்டுமே என்று கூறியுள்ளார். அந்த சவாலை ஏற்று தான் இந்த படமே தொடங்கியது.

இது தனி சாதிப் படமல்ல, தமிழ் சாதிப் படமாக இருக்கும். சாதி, மதம் கடந்து மனிதனாக இருப்பவர்கள் யார் பார்த்தாலும் அரங்கம் மட்டுமல்ல அவர்கள் ஆன்மாவும் அதிரும், அறம் சார்ந்த ஒரு மாவீரனை அவர்கள் தரிசிப்பார்கள்.

என்னுடைய வாழ்நாள் லட்சியமே மூன்று காடுகள் பற்றிய படங்கள் எடுப்பது தான். ஒன்று வீரப்பன் வாழ்ந்த சந்தனக்காடு, அதை நிறைவேற்றி விட்டேன். இரண்டாவது காடுவெட்டி குரு அவர்களும் தோழர் தமிழரசன் அவர்களும் வாழ்ந்த முந்திரிக்காடு, இதில் ஒருவரை பற்றி தற்போது படம் எடுத்துள்ளேன். மூன்றாவது என்னுடைய தாய்க்கும் தாய் மொழிக்கும் சமமான எனது தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வன்னிக்காடு. லட்சியப் பாதையில் உள்ள இரண்டு படங்களை முடித்துள்ளது போல் இன்னும் இருக்கும் இரண்டு படங்களையும் கட்டாயம் எடுப்பேன். தமிழ் இனத்தின் தலைநிமிர்விற்காக நான் இதை செய்யாமல் சாய மாட்டேன், அனைவரும் ஆதரவு தாருங்கள், நன்றி,” என்றார்.

Related Posts

யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்..!

யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்..!

by Thamil
June 13, 2025
0

இன்றையதினம் யாழில் 10 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா இன்றையதினம் நடைபெறுகிறது. அந்தவகையில் கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த...

பிரமந்தனாறு குளத்தின் வாய்க்கால் புனரமைப்பு ஆரம்பித்து வைப்பு..!

பிரமந்தனாறு குளத்தின் வாய்க்கால் புனரமைப்பு ஆரம்பித்து வைப்பு..!

by Thamil
June 13, 2025
0

தேசிய மக்கள் சக்தியின் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட 3 மில்லியன்(முப்பது இலட்சம் ரூபா) ரூபா செலவில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர்...

ஜூன் 25 ஆம் திகதி யாழ். வருகின்றார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்..!

ஜூன் 25 ஆம் திகதி யாழ். வருகின்றார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்..!

by Thamil
June 13, 2025
0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க், எதிர்வரும் 25 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார் என்று உறுதியான வகையில் அறியமுடிகின்றது. ஐக்கிய...

வட்டுக்கோட்டையை திட்டமிட்டு அழிக்கின்றீர்களோ தெரியவில்லை..!

வட்டுக்கோட்டையை திட்டமிட்டு அழிக்கின்றீர்களோ தெரியவில்லை..!

by Thamil
June 13, 2025
0

"வட்டுக்கோட்டை என்பது தொகுதியா? அல்லது பிரதேசமா? வட்டுக்கோட்டையை திட்டமிட்டு நீங்கள் அழிக்கின்றீர்களோ தெரியவில்லை" என கலாநிதி சிதம்பரமோகன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி...

சென்னையில் நடைபெற்ற இலங்கை கலைஞர்களின் “தீப்பந்தம்” பட விழா..!

சென்னையில் நடைபெற்ற இலங்கை கலைஞர்களின் “தீப்பந்தம்” பட விழா..!

by Thamil
June 13, 2025
0

இலங்கை கலைஞர்களின் படைப்பான "தீப்பந்தம்" முழுநீள திரைப்பட பட விழா சென்னையில் நடைபெற்றது. இதன்போது தேசிய தலைவர் பிரபாகரனின் பாராட்டு பெற்ற தென்னிந்திய பிரபல இயக்குனரும், தமிழ்...

அனைவருக்கும் நன்றி தெரிவித்த சுமந்திரன்..!

அனைவருக்கும் நன்றி தெரிவித்த சுமந்திரன்..!

by Thamil
June 13, 2025
0

"யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆட்சியை இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்ற ஒத்துழைத்த எமது கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்" என இலங்கைத்...

முல்லைத்தீவு மாவட்ட விவசாய குழுக் கூட்டம்..!

முல்லைத்தீவு மாவட்ட விவசாய குழுக் கூட்டம்..!

by Thamil
June 13, 2025
0

முல்லைத்தீவு மாவட்டத்தின், மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று(12) மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது...

மூதூரில் சர்வதேச அன்னையர் தின நிகழ்வு..!

மூதூரில் சர்வதேச அன்னையர் தின நிகழ்வு..!

by Thamil
June 13, 2025
0

சர்வதேச அன்னையர் தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (13) மூதூர் கிளிவெட்டி, பாரதிபுரம் பாரதி மகா வித்தியாலயத்தில் அதிபர் பு.  ஜெயகாந்தன் தலைமையில் இடம் பெற்றது.  வித்தியாலயத்தின்  ஆரம்பப்பிரிவு...

யாழ். மாநகர சபையால் எரியூட்டப்படும் கழிவுகள் ; பாதிக்கப்படும் மக்கள்..!

யாழ். மாநகர சபையால் எரியூட்டப்படும் கழிவுகள் ; பாதிக்கப்படும் மக்கள்..!

by Thamil
June 13, 2025
0

கல்லூண்டாயில் உள்ள யாழ். மாநகர சபையின் கழிவு சேமிக்கும் பகுதியில் இரவு மற்றும் பகல் வேளைகளில் குப்பைகள் எரியூட்டப்படுகின்றதால் மக்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக இலங்கை தமிழரசுக்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி