நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாநகரசபையில் சுயேட்சையாக பசு சின்னத்தில் போட்டியிட்டு பண்டாரிக்குளம் வட்டாரத்தில் வெற்றிபெற்ற சிவசுப்பிரமணியம் பிறேமதாஸ் இன்று சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டார்.
சிரேஸ்ட கணித ஆசிரியரும் சமாதான நீதவானுமாகிய ல.சதீஸ்குமார் முன்னிலையில் பண்டாரிக்குளம் அம்மன் ஆலயத்தில் குறித்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.
முன்னதாக ஆலயத்தில் விசேட நிருபர் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் அதனை தொடர்ந்து சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வவுனியா மாநகரசபை உறுப்பினர்களான சு.காண்டீபன், ப.கார்த்தீபன், சி.ரவீந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், சமூக மட்ட பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டதுடன் உறுப்பினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

