சுகாதாரப் பிரச்சினை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (5) ஆரம்பித்த வேலைநிறுத்தத்தை இன்றும் தொடரப்போவதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இன்று காலை 8 மணிக்கு வேலைநிறுத்தம் ஆரம்பித்தது. இதன் காரணமாக இன்று (6) வெள்ளி கிழமை நுவரெலியா வைத்திய சாலையில் வேலை நிறுத்தம் தொடங்கியது. மருந்து வாங்குவதற்காகவும், ஏனைய தேவைகளுக்கு வந்த போதும் மருந்து வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதன் காரணமாக மருந்து வாங்குவதற்கு அரச மருந்தகமான அரச ஒசுசலவில் மருந்து வழங்குவதற்காக வரிசையில் காத்திருந்த நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டனர். ஒரு சிலர் மட்டுமே மருந்து மாத்திரைகளை வாங்கி சென்றனர். அதில் ஒரு சிலர் மருந்து மாத்திரைகள் வாங்க முடியாமல் தவித்தனர்.
இதனால் சுகாதார பணியாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடரும் சந்தர்ப்பத்தில் நோயாளர்கள் மருந்து மாத்திரைகளை வாங்க வேண்டுமானால் நுவரெலியா அரச ஒசுசலவில் இன்று மற்றும் நாளை , நாளை மறுநாள் ஆகிய நாட்களில் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது என வரிசையில் காத்திருந்த நோயாளிகள் தெரிவித்தனர்.