யாழ்ப்பாணம் – வடமராட்சி, தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் வாராந்தம் நடைபெறும் நிகழ்வில் இன்றைய நாள் (06) ஆன்மீக அருளுரை இடம் பெற்றது.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வு காலை 10:45 மணியளவில் பஞ்சபுராண ஓதுதலுடன் ஆரம்பமானது.
இதில் ஆன்மீக அருளுரையாக, “வாழ்வும் வழிபாடும்” என்ற தலைப்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறை மாணவன் க.பிரணவன் உரை நிகழ்த்தினார்கள்.
உதவியாக கோப்பாய் தெற்கு, அத்தித்தோட்டம் அருள்மிகு பரமேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக,
ஆலய கட்டிட நிதிக்காக பரிபாலன சபையிடம் ரூபா 50,000 நிதி வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், நி்வாகிகள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

