முல்லைத்தீவு கற்சிலைமடு பண்டாரவன்னியன் கிராமத்தின் நிறைவாழ்வு அபிவிருத்தி மையத்தின் வருடாந்த திறனாய்வு போட்டி நேற்றைய தினம் சிறப்புற இடம்பெற்றிருந்தது.
முல்லைத்தீவு கற்சிலைமடு பண்டாரவன்னியன் கிராமத்தின் நிறைவாழ்வு அபிவிருத்தி மையத்தில் கல்வி கற்கும் 300 இற்கும் அதிகமான இளையவர்களுக்கு திறனாய்வு போட்டிகள் நேற்றைய தினம் (05.06.2025) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு பயிற்றுனர் இரத்தினராசா சகீதரசீலன், கௌரவ விருந்தினராக V. S.ஜஸ்து தலைமை போதகர் மற்றும் இப்பிரதேச பிரதேச சபை உறுப்பினர் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இச்சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வு, அணிநடை, இடைவேளை நிகழ்ச்சி, வினோத உடைப் போட்டி என்பன சிறப்பாக நடைபெற்றிருந்தன. பங்கு கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பதக்கம், சான்றிதழ்கள், வெற்றிக்கிண்ணம், பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.



